VINU'S BLOG
  • Home
  • HEALTH TIPS
    • Ladies
    • Heart
    • Liver
    • EYES
    • General
  • BEAUTY TIPS
    • Skin Care
    • Glow Tips
    • Lips
    • Dark Circle
    • Hair Care
  • TAMIL KAVITHAI
    • Love Feeling
    • Love Failure
    • Motivational
    • Happiness
    • Friendship
    • Birthday Wishes
    • General
  • SPIRITUAL CONTENTS
  • FOOD RECIPES
    • Veg
    • Non - Veg
    • Sweets
    • Snacks
    • General Tips
  • THIRUKURAL
    • அறத்துப்பால்
    • பொருட்பால்
    • இன்பத்துப்பால்
  • Contact
    • Privacy Policy
    • About Us

​SPIRITUAL CONTENTS

Tamil Spiritual Articles

ஸ்ரீ குபேரன் 108 போற்றி

5/29/2020

0 Comments

 
Picture

1. அளகாபுரி அரசே போற்றி
2. ஆனந்தம் தரும் அருளே போற்றி
3. இன்பவளம் அளிப்பாய் போற்றி
4. ஈடில்லாப் பெருந்தகையே போற்றி
5. உகந்து அளிக்கும் உண்மையே போற்றி
6. ஊக்கம் அளிப்பவனே போற்றி
7. எளியோனுக்கு அருள்பவனே போற்றி
8. ஏழ்மை நிலை அகற்றுவாய் போற்றி
9. ஐஸ்வர்யம் அளிப்பவனே போற்றி
10. ஒன்பது நிதி பெற்றவனே போற்றி
11. ஓங்கார பக்தனே போற்றி
12. கருத்தில் நிறைந்தவனே போற்றி
13. கனகராஜனே போற்றி
14. கனகரத்தினமே போற்றி
15. காசு மாலை அணிந்தவனே போற்றி
16. கிந்நரர்கள் தலைவனே போற்றி
17. கீர்த்தி அளிப்பவனே போற்றி
18. கீரிப்பிள்ளைப் பிரியனே போற்றி
19. குருவாரப் பிரியனே போற்றி
20. குணம் தரும் குபேரா போற்றி
21. குறை தீர்க்கும் குபேரா போற்றி
22. கும்பத்தில் உறைபவனே போற்றி
23. குண்டலம் அணிந்தவனே போற்றி
24. குபேர லோக நாயகனே போற்றி
25. குன்றாத நிதி அளிப்பாய் போற்றி
26. கேடதனை நீக்கிடுவாய் போற்றி
27. கேட்டவரம் அளிப்பவனே போற்றி
28. கோடி நிதி அளிப்பவனே போற்றி
29. சங்க நிதியைப் பெற்றவனே போற்றி
30. சங்கரர் தோழனே போற்றி
31. சங்கடங்கள் தீர்ப்பவனே போற்றி
32. சமயத்தில் அருள்பவனே போற்றி
33. சத்திய சொரூபனே போற்றி
34. சாந்த சொரூபனே போற்றி
35. சித்ரலேகா பிரியனே போற்றி
36. சித்ரலேகா மணாளனே போற்றி
37. சிந்தையில் உறைபவனே போற்றி
38. சிந்திப்போர்க்கு அருள்பவனே போற்றி
39. சீக்கிரம் தனம் அளிப்பாய் போற்றி
40. சிவபூஜை பிரியனே போற்றி
41. சிவ பக்த நாயகனே போற்றி
42. சிவ மகா பக்தனே போற்றி
43. சுந்தரர் பிரியனே போற்றி
44. சுந்தர நாயகனே போற்றி
45. சூர்பனகா சகோதரனே போற்றி
46. செந்தாமரைப் பிரியனே போற்றி
47. செல்வ வளம் அளிப்பவனே போற்றி
48. செம்மையான வாழ்வளிப்பாய் போற்றி
49. சொர்ணவளம் அளிப்பவனே போற்றி
50. சொக்கநாதர் பிரியனே போற்றி
51. சௌந்தர்ய ராஜனே போற்றி
52. ஞான குபேரனே  போற்றி
53. தனம் அளிக்கும் தயாபரா போற்றி
54. தான்ய லெட்சுமியை வணங்குபவனே போற்றி
55. திகட்டாமல் அளித்திடுவாய் போற்றி
56. திருவிழி அழகனே போற்றி
57. திருவுரு அழகனே போற்றி
58. திருவிளக்கில் உறைவாய் போற்றி
59. திருநீறு அணிபவனே போற்றி
60. தீயவை அகற்றுவாய் போற்றி
61. துன்பம் தீர்த்திடுவாய் போற்றி
62. தூயமனம் படைத்தவனே போற்றி
63. தென்னாட்டில குடி கொண்டாய் போற்றி
64. தேவராஜனே போற்றி
65. பதுமநிதி பெற்றவனே போற்றி
66. பரவச நாயகனே போற்றி
67. பச்சை நிறப் பிரியனே போற்றி
68. பவுர்ணமி நாயகனே போற்றி
69. புண்ணிய ஆத்மனே போற்றி
70. புண்ணியம் அளிப்பவனே போற்றி
71. புண்ணிய புத்திரனே போற்றி
72. பொன்னிற முடையோனே போற்றி
73. பொன் நகை அணிபவனே போற்றி
74. புன்னகை அரசே போற்றி
75. பொறுமை கொடுப்பவனே போற்றி
76. போகம்பல அளிப்பவனே போற்றி
77. மங்கல முடையோனே போற்றி
78. மங்களம் அளிப்பவனே போற்றி
79. மங்களத்தில் உறைவாய் போற்றி
80. மீன லக்னத்தில் உதித்தாய் போற்றி
81. முத்து மாலை அணிபவனே போற்றி
82. மோகன நாயகனே போற்றி
83. வறுமை தீர்ப்பவனே போற்றி
84. வரம் பல அருள்பவனே போற்றி
85. விஜயம் தரும் விவேகனே போற்றி
86. வேதம் போற்றும் வித்தகா போற்றி
87. வைர மாலை அணிபவனே போற்றி
88. வைகுண்டவாசப் பிரியனே போற்றி
89. நடராஜர் பிரியனே போற்றி
90. நவதான்யம் அளிப்பவனே போற்றி
91. நவரத்தினப் பிரியனே போற்றி
92. நித்தியம் நிதி அளிப்பாய் போற்றி
93. நீங்காத செல்வம் அருள்வாய் போற்றி
94. வளம் யாவும் தந்திடுவாய் போற்றி
95. ராவணன் சோதரனே போற்றி
96. வடதிசை அதிபதியே போற்றி
97. ரிஷி புத்திரனே போற்றி
98. ருத்திரப் பிரியனே போற்றி
99. இருள் நீக்கும் இன்பனே போற்றி
100. வெண்குதிரை வாகனனே போற்றி
101. கைலாயப் பிரியனே போற்றி
102. மனம் விரும்பும் மன்னவனே போற்றி
103. மணிமகுடம் தரித்தவனே போற்றி
104. மாட்சிப் பொருளோனே போற்றி
105. யந்திரத்தில் உறைந்தவனே போற்றி
106. யௌவன நாயகனே போற்றி
107. வல்லமை பெற்றவனே போற்றி
108. குபேரா போற்றி  போற்றி

0 Comments

ஏன் தாயாரை சேவித்த பிறகே பெருமாளை சேவிக்க வேண்டும்?

5/28/2020

0 Comments

 

                இந்த ஜகம் முழுவதையும் பகவான் ஒருவன்தான் ரக்ஷிக்கிறானே தவிர முதலில் தாயாரை சேவித்த பின் பெருமாளை சேவிக்க வேண்டும்...!!!

முதலில் சீதா பிராட்டியாரையும், தொடர்ந்து லட்சுமணனையும் குகனை ஏற்றுக் கொள்ளும்படியாகச் செய்த பிறகே, குகனை கடாக்ஷிக்கிறாராம் ராமபிரான்.

ஸ்ரீரங்கநாதரிடம் பிரார்த்திக்கும்போது, ஸ்ரீரங்கநாச்சியாரை முன்னிட்டே பிரார்த்திக்கிறார் ஸ்ரீராமாநுஜர்.

ஏன் நாம் நேராக பெருமாளிடம் போய் கேட்டுக்கொள்ளக் கூடாதா? பெற வேண்டியவன் நானாகவும், கொடுக்க வேண்டியவன் பெருமாளாகவும் இருக்கும் போது, நேராக பெருமாளிடமே பெற்றுக்கொள்ளலாமே. இடையில் பிராட்டியார் எதற்கு?

இதற்கு, பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானம் செய்யும்போது சொல்கிறார்:

கொடுப்பவன் பகவானாக இருந்தாலும், அந்த பகவானே உபாயம் என்பதில் நமக்கு உறுதியான எண்ணம் இருக்க வேண்டும் அல்லவா?

அந்த உறுதியான எண்ணத்தை, அதாவது உபாய நிஷ்டையை நமக்கு அருள்பவள்தான் மஹாலக்ஷ்மி பிராட்டியார். மஹாலக்ஷ்மியின் கடாக்ஷத்தால் பகவானிடம் உறுதியான பக்தி ஏற்பட்டுவிட்ட பிறகு நடப்பது நடக்கட்டும் என்று கவலை இல்லாமல் விச்ராந்தியாக இருந்துவிடலாம்.இல்லையென்றால், தினமும் கவலைப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டியதுதான்.

ஒருவர் இருக்கிறார். அவர் காலையில் எழுந்ததில் இருந்தே எதற்காவது கவலைப்பட்டுக் கொண்டே இருப்பார். அதேசமயத்தில் பகவான் கிருஷ்ணர் அருளிய,

ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாமேஹம் சரணம் வ்ரஜ 
அஹம்த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸுச: 
- என்ற சுலோகத்தையும் சொல்லிக் கொண்டே இருப்பார்.

'உன்னுடைய எல்லா பாவங்களில் இருந்தும் உன்னை நான் விடுவிக்கிறேன். அப்படி இருக்க நீ ஏன் சோகப்படுகிறாய்?' என்ற அர்த்தத்தில், கிருஷ்ணர் அருளிய இந்த சுலோகத்தைச் சொல்லிக்கொண்டே அவர் நாள்முழுவதும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால், அவருக்கு பகவானிடத்தில் உறுதியான நம்பிக்கை ஏற்படவில்லை என்றுதான் பொருள்.

காரணம், மஹாலக்ஷ்மியின் கடாக்ஷம் அவருக்குக் கிடைக்கவில்லை.

நாம் எல்லோரும் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்றால், நாம் தான் நம் குடும்பத்தையே காப்பாற்றிக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். அந்த நினைப்புதான் நம்மை எப்போதும் கவலையில் ஆழ்த்திவிடுகிறது. உண்மையில் நாமா எல்லோரையும் காப்பாற்றுகிறோம்?

கூரத்தாழ்வார் ஒரு சுலோகத்தில், 'நான் போன பிறகு, என் மனைவியை யார் காப்பாற்றுவார்கள் என்று இத்தனைநாள் நான் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். சட்டென்று ஒருநாள் நான் புரிந்து கொண்டேன். எனக்குப் பிறகு அவர்கள் இன்னும் நன்றாக இருப்பார்கள் என்று அப்போதுதான் நான் புரிந்துகொண்டேன்.

இத்தனை நாளாக நான்தான் அவளை ரக்ஷித்துக் கொண்டிருந்ததாக நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், பகவான்தான் அவளை மட்டுமல்ல என்னையும் சேர்த்தே ரக்ஷித்துக்கொண்டிருக்கிறார் என்பதை இப்போது நான் புரிந்துகொண்டேன். இதுவரை என்னையும் என் மனைவியையும் ரக்ஷித்து வந்த பகவான், என் மனைவியை நான் போன பிறகும்கூட ரக்ஷிக்கத்தான் போகிறான்' என்கிறார்.

இந்த ஜகம் முழுவதையும் பகவான் ஒருவன்தான் ரக்ஷிக்கிறானே தவிர, கணவன்
ரக்ஷிக்கிறான், மாதா பிதாக்கள் ரக்ஷிக்கிறார்கள், சொத்துக்கள் ரக்ஷிக்கும்
என்றெல்லாம் நினைப்பது அபத்தம். பகவான் மட்டுமே ரக்ஷகர். ஆனால், அவர் அப்படி ரக்ஷிக்க வேண்டுமானால், அவர் திருமகளோடு சேர்ந்து இருக்க வேண்டும்.

அதனால்தான் ஆழ்வார் பாடுகிறார்:
'ஞாலத்தோடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்
சாலப்பலநாள் உகந்தோறு உயிர்கள் காப்பானே
கோலத்திருமாமகளோடு உன்னைக் கூடாதே
சாலப்பலநாள் அடியேன் இன்னும் தளர்வேனோ'

திருமகளோடு சேர்ந்திருந்து இந்த உலக உயிர்களை யுகங்கள்தோறும் காத்து ரக்ஷிக்கும் உன் திருவடிகளை அடையாமல் நான் இன்னும் எத்தனை நாள்தான் துன்பப்படுவது என்று கேட்கிறார்.

எனவே, முதலில் மஹாலக்ஷ்மியையும். பிறகு, பெருமாளையும் சேவிக்க வேண்டும்.

ஒருவரை சேவித்து விட்டு மற்றவரை சேவிக்காமல் இருக்கக் கூடாது. அதாவது, இருவருடைய திருவடிகளையும் ஒருசேரப் பற்றிக் கொள்ள வேண்டும். இருவரிடமும் பற்றுக் கொள்ள வேண்டும்.

0 Comments

கோவில் அதிசயங்கள்..!!

5/26/2020

0 Comments

 
Picture

*அந்த காலத்தில் கோவில் கட்டும் போது ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒன்றை தனித்தன்மையுடன் அமைத்தனர்.
ஆனால் ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒரு தனிச்சிறப்பு உண்டு!

அவைகளில் சில:*

*1. உற்சவர் அல்லாமல் மூலவர் வீதியில் வலம் வருவது சிதம்பரம். - நடராஜ கோயில்

*2. கும்பகோணம் அருகே “தாராசுரம்” என்ற ஊரில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவிலில்உள்ள சிற்பத்தில் வாலியும் சுக்ரீவனும் சண்டை இடும் காட்சி உள்ளது. இங்கிருந்து ராமர் சிற்பம் இருக்கும் தூண் தெரியாது. ஆனால் ராமன் அம்பு தொடுக்கும் சிற்பத்தில் இருந்து பார்த்தால் வாலி சுக்ரீவன் போர் புரியும் சிற்பம்.

*3. தர்மபுரி மல்லிகார்ஜுன கோவிலில் உள்ள நவாங்க மண்டபத்தில் இரு தூண்களின் அடி பூமியில் படியாது.

*4. கரூர் மாவட்ட குளித்தலை கடம்பவனநாதர் கோவிலில் இரட்டை நடராஜர் தரிசனம் செய்யலாம்.

*5. கருடாழ்வார் நான்கு கரங்களுள் இரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியபடி காட்சி தரும் ஸ்தலம் கும்பகோணம் அருகே வெள்ளியங்குடி. 108 திவ்யதேசத்தில் இங்குமட்டும் இது போல் காட்சி தருகிறார்.

*6. நாச்சியார் கோவில் கல்கருடன் சன்னதியில் 4 பேர் தூக்குவார்கள் பின்பு 8,16, கோவில் வாசலில் 64 பேர் தூக்கி வருவார்கள் கருடனும் முகத்தில் வேர்வை துளிர்க்கும்.

*7. ஸ்ரீபெரும்புதூரில் உள் ராமானுஜர் உருவம் விக்ரஹமோ, வேறு உலோகப் பொருளால் ஆன வடிவமைப்போ இல்லை. குங்குமப்பூ, பச்சை கற்பூரம் கொண்ட மூலிகைப் பொருளால் ஆனது.

*8. திருநெல்வேலி-கடையம் அருகே நித்ய கல்யாணி உடனுறை விஸ்வநாதர் கோயிலில் உள்ள வில்வமரத்தில் லிங்க வடிவில் காய் காய்க்கிறது.

*9 கும்பகோணம் அருகே திருநல்லூரில் உள்ள சிவலிங்கத் திருமேனி ஒரு நாளைக்கு 5 முறை வெவ்வேறு வண்ணங்களில் நிறம் மாறுவதால் “பஞ்சவர்ணேஸ்வரர்” என்று பெயர்.

*10. விருதுநகர், சொக்கநாதன்புத்தூரில் உள்ள தவநந்திகேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்திக்கு கொம்போ, காதுகளே இல்லை.

*11. ஆந்திராவில் சாமல் கோட்டை அருகே உள்ள 3 பிரதான சாலைகளில் சந்திப்பில் உள்ள 72 அடி ஆஞ்சநேயர் சிலையின் கண்களும். சில நூறு மைகளுக்கு அப்பால் உள்ள பத்ராசல ஆலயத்தில் ஸ்ரீராமன் திருவடிகளும் ஒரே மட்டத்தில் உள்ளன.

*12. வேலூர் அருகே உள்ள விருஞ்சிபுரம் என்ற தலத்தில் உள்ள கோயில் தூணின் தென்புறம் அர்த்த சந்திரவடிவில் 1 முதல் 6 வரையும், 6முதல் 12 வரையும் எண்கள் செதுக்கியுள்ளன.

மேற்புறம் உள்ள பள்ளத்தில் வழியே ஒரு குச்சியை நீட்டினால், குச்சியுன் நிழல் எந்த எண்ணில் விழுகிறதோ அதுதான் அப்போது மணி ஆகும்.

0 Comments

அக்னி நட்சத்திரம் கத்திரிவெயில்  செய்யக்கூடாதவைகள் என்ன?

4/26/2020

0 Comments

 
அக்னி நட்சத்திரம் என்பது சூரியபகவான் மேஷம் ராசியில் பயணித்து கொண்டு இருக்கும் போது பரணி நட்சத்திரம் 3ம் பாதத்தில் நுழைந்து தொடர்ந்து பயணித்து, கிருத்திகை நட்சத்திரம் முழுவதையும் கடந்து, ரோகிணி நட்சத்திரம் 2ம் பாதத்தில் நுழையும் வரையில் இருக்கும் இடைப்பட்ட காலத்தை அக்கினி நட்சத்திர காலம் எனப்படுகிறது .
 
இந்த காலத்தில் பூமி , சூரியனுக்கு அருகில் பயணிக்கும் .
அந்த நாட்களில் சூரியனின் கதிர்வீச்சு பூமியின் மேல் செங்குத்தாக விழும் . அந்த சமயங்களில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் . இந்த வெப்ப காலத்தை கத்திரி வெயில் எனவும்  அழைக்கப்படுகிறது .
 
இந்த அக்கினி நட்சத்திரம் 2020 ல் வருகிற 4-5-20ம் தேதி நள்ளிரவு 2;29க்கு
தொடங்கி 28-5-20ம் தேதி இரவு 9;34 க்கு முடிகிறது.
இந்த சமயத்தில் வெப்பநிலை மிக அதிகமாக இருக்கும் . இந்த அக்கினி நட்சத்திர காலத்தில்
திருமணம் , புதிய தொழில் ஆரம்பித்தல் கிரகபிரவேசம் , வீடு மற்றும் கட்டிடங்கள் கட்ட பூஜை போடுதல் , புதுவீடு குடிபுகுதல் போன்ற சுபக்கிரக்களை தவிப்பது நல்லது.
 
ஆனால் குலதெய்வ வழிபாடு , காதுகுத்துதல் , கிடாவெட்டுதல் ,
சீமந்தம் , இஷ்ட தெய்வ வழிபாடு போன்றவைகளை செய்யலாம் .
0 Comments

புண்ணியம் என்பது என்ன?

4/26/2020

0 Comments

 
நம்மிடம் உள்ளதை நம்மால்முடிந்ததை செய்வது. மற்றவர்கள் நல்லாயிருக்க வேண்டும் என்ற எண்ணம் படைத்தவன் மட்டுமே புண்ணியத்தைச் செய்ய வேண்டும் என்று நினைப்பான். அப்படிப்பட்ட நல்ல மனம் ஒன்றே போதும் புண்ணியம் செய்வதற்கு. ஆம். புண்ணியம் செய்ய மனம் வேண்டுமே தவிர பணம் தேவையில்லை. உங்கள் மனம் நல்லதையே நினைக்கட்டும் அதுவும் மற்றவர்களுக்காக இருக்கட்டும். இது தான் புண்ணியம்.
 
மற்றவர்களின் துக்கங்களை உங்களது என்று எண்ணி  வருந்துங்கள்.உங்களுக்கு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை மற்றவர்களுக்காகவாது கிடைக்கட்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். அனைத்து உயிர்களுக்கும் உங்களுக்கும் தொடர்பு உண்டு என்று எண்ணிக் கொள்ளுங்கள். உங்களால் அனைவருக்கும் அன்பான ஆதரவான எண்ணங்களை அளிக்க முடியும் என்று எண்ணுங்கள். உங்கள் எண்ணங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் என்று நம்புங்கள். இறைவனை துணைக்கு அழையுங்கள்.  மற்றவர்களுக்காக உதவ இறைவனிடம் வேண்டுங்கள். தன்னல மற்ற எண்ணத்தை இவ்வுலகில் பரவ விடுங்கள். அனைவரும் உங்களுக்கு அன்பானவர்களாக மாறிவிடுவார்கள். உங்கள் உள்ளம் மகிழ்ச்சியாகி விடும். அனைவரும் நம்மதியாக வாழ்வார்கள் அந்த மகா புண்ணியம் உங்களை மட்டுமே வந்து சேரும்.
 
 இந்த புண்ணியச் செயலுக்கு நீங்கள் செலவு செய்தது என்ன?
 
 ஒன்றுமில்லையே. பைசா கூட செலவு செய்யவில்லை. எங்கும் அலையவில்லை. யாரிடமும் கோபம் கொள்ளவில்லை. பொய் கூறவில்லை. யாரிடமும் எதற்காகவும் கையேந்தவில்லை. யாரும் உங்களை குறைகூறப் போவதில்லை. எதையும் இழக்கவில்லை. எதையும் இழக்காமல் நீங்கள் புண்ணியத்தை மட்டுமே சம்பாதிக்கிறீர்கள். சரி,இதை எப்படி செயல் வடிவத்திற்கு கொண்டு வருவது என்பதை பார்ப்போம். இதை செயல் வடிவத்திற்கு கொண்டு வருவதுமிக எளிது. தினமும் ஏதேனும் ஒரு நேரத்தில் யாராவது ஒருவர் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுங்கள். இதற்காக நேரம் காலம் பார்க்கத் தேவையில்லை. எந்த நேரத்திலும் யாருக்காகவும் எண்ணிக் கொள்ளலாம். ஆரம்பத்தில் சொந்த பந்தங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள். நாளடைவில் கண்ணில் படும் அனைவருக்காகவும் வேண்டிக் கொள்வீர்கள்.
 
நாட்கள் செல்ல செல்ல, நீங்கள் கேள்விப்பட்டவர்களுக்காகவும் அவர்கள் நல்ல முறையில் வாழ நீங்கள் எண்ணத் துவங்குவீர்கள். நீங்கள் வேண்டிக்கொள்ளும் நபர் பற்றி கவலைப் படாதீர்கள். அவர் எவ்வளவு மோசமானவராக இருந்தாலும் அவர் நல்ல முறையில் வாழ நீங்கள் வேண்டிக் கொள்ளுங்கள். ஆம்புலன்ஸ் வண்டிச் சத்தம் கேட்கும் போதல்லாம் அதில் பயணம் செய்பவர் நல்ல முறையில் குணம் அடையஇறைவனை வேண்டிக்கொள்ளுங்கள். யாரோ ஒருவர் விபத்தில் அடிபட்டுவிட்டார் என்று கேள்விப்பட்டால் அவர் உடல் நலம்பெற எண்ணிக்கொள்ளுங்கள்.
 

0 Comments

ஏழரைச் சனி என்ன செய்யும்?

3/14/2020

0 Comments

 
Picture
Page available in Wikimedia
Picture
Page available in Wikimedia
Picture
Page available in Wikimedia
0 Comments

மாசிமகம் தினத்தில் நிகழ்வுற்றதாக புராணங்கள் கூறும் சில சம்பவங்கள்:

2/28/2020

0 Comments

 
Picture
​1. மயிலாடுதுறைக்கு  அருகிலுள்ள திருக்குறுக்கை வீரட்டானேஸ்வரத்தில் மாசி மகத்தன்று காம தகனவிழா நடைபெறும். சிவபெருமான் ஆழ்ந்த தியானத் திலிருக்கும்போது, தேவர்களின் வேண்டுகோளின்படி சிவபெருமான் மீது மலரம்பு எய்தான் மன்மதன். கோபம் கொண்ட அவரின் நெற்றிக் கண்ணிலிருந்து புறப்பட்ட தீப்பொறிகள் மன்மதனை எரித்து சாம்பலாக்கியது. பிறகு அவன் மனைவி ரதிதேவியின் வேண்டுதலால், மீண்டும் மன்மதன் அவள் கண்களுக்கு மட்டும் தெரியும் படி சிவபெருமான் அருளினார். இந்த நிகழ்வை நினைவுபடுத்தும் விழாவாக காம தகனவிழா மாசிமகத்தன்று நடைபெறும்.
 
2. இரண்யன் என்ற அசுரன் பூமாதேவியைக் கடத்திச் சென்று பாதாள லோகத்தில் ஒளித்து வைத்தான். இதனை அறிந்த மகாவிஷ்ணு, வராக அவதாரம் எடுத்து பாதாள லோகம் சென்று அந்த அசுரனை வதம் செய்து, பூமாதேவியை வெளிக்கொணர்ந்தது மாசி மக நட்சத்திரத் திருநாளில்தான் என்று விஷ்ணு புராணம் கூறும்.
 
3. கன்னிப் பெண்ணான குந்திதேவி, சூரிய பகவானை நேரில் வரவழைக்கும் மந்திரத்தை உச்சரித்ததால், சூரிய பகவான் அவள்முன் தோன்றினார். அதன் விளைவால் குந்திதேவி குழந்தை பெற்றாள். பழிச்சொல்லுக்கு அஞ்சி அந்தக் குழந்தையை (கர்ணன்) ஒரு பெட்டியில் வைத்து ஆற்றில் விட்டாள்.
 
அந்தப் பாவம் அவளை வாட்டியது. அதற்குப் பிராயச்சித்தம் செய்ய வேண்டி, உரோமச முனிவரைச் சந்தித்தாள். அவர், "மாசி மக நட்சத்திரத்தன்று ஏழு கடல்களில் ஒரே சமயத்தில் நீராடினால் உன் பாவம் நீங்கும்' என்று சொன்னார். "அது எப்படி ஒரே நாளில் ஏழு கடல்களில் நீராட முடியும்?' என்று பலத்த யோசனையில் ஆழ்ந்த குந்திதேவி, வழி காட்டியருளுமாறு இறைவனை இறைஞ்சினாள். அப்போது, "திருநல்லூர்  கோவிலுக்குப் பின்புறம் ஒரு தீர்த்தம் உள்ளது. அதை ஏழு கடலாக நினைத்து மாசி மகத்தன்று நீராடு வாயாக' என்று அசரீரி ஒலித்தது. குந்திதேவியும் அப்படியே செய்து தன் பாவத்திலிருந்து விடு பட்டாள். அவள் நீராடிய தீர்த்தம்- சப்த சாகர தீர்த்தம் என்று அழைக்கப் படுகிறது.
 
4. தட்சன், சிவபெருமானை நோக்கி பல வருடங்கள் கடுமையாக தவம் மேற்கொண்டான். அதன் பலனால் சிவபெருமான் அவன்முன் தோன்றி, "வேண்டும் வரம் என்ன?' என்று கேட்க, "உமையவள் எனக்கு மகளாகக் கிடைக்க வேண்டும். நான் உமையவளை வளர்க்க வேண்டும். அதன்பின் தக்க பருவத்தில் தாங்கள் மணம்புரிய வேண்டும்' என்று வரம் கேட்டான். இறைவனும் அவன் கேட்டபடி அருளினார். அந்த வரத்தின் படி உமையவள் காளிந்தி நதியில் ஒரு தாமரைப் பூவில் வலம்புரிச்சங்கு வடிவாய் மாசி மக நட்சத்திரத்தன்று தோன்றினாள். அன்றைய தினம் தட்சன் தன் மனைவியுடன் அந்த நதியில் நீராட வந்தபோது, தாமரை மலரில் தோன்றிய வலம்புரிச்சங்கு குழந்தையாக மாறியது. அந்தப் பெண் குழந்தையைக் கண்டெடுத்து வளர்த் தான் தட்சன்.
 
5. மாசி மகத்தன்றுதான் சுவாமிமலை திருத் தலத்தில், தன் மகன் முருகனிடம் சிவபெருமான் உபதேசம் பெற்றார் என்று சிவபுராணம் கூறுகிறது. அதனால் புதிதாகக் கல்வி கற்பவர்கள்- எந்தக் கல்வியாக இருந்தாலும்- அன்று தகுந்த ஆசிரியரிடம் கற்றால் சிறந்து விளங்கலாம் என்பர்.
 
6. வல்லாள மகாராஜனுக்கு இறைவனே மகனாக எழுந்தருளினார் என்பதால், ஒவ்வொரு வருடமும் திருவண்ணாமலையார் மாசி மகம் நட்சத்திரத்தில் பள்ளிகொண்டாப் பட்டு என்னும் ஊருக்கு எழுந்தருளி, அந்த மன்னனுக்காக நீத்தார் கடனுக்குரிய வழிபாட்டினை நடத்திவரும் விழா திருவண்ணாமலையில் நடைபெறுகிறது.
 
பல பெருமைகளைக் கொண்ட மாசி மக நட்சத்திரத்தன்று புனித நீர்நிலையில் நீராடி, விரதம் மேற்கொண்டு இறைவனை வழிபடுவோருக்கு புனிதம் கிட்டுவதுடன், பல பேறுகளும் பெற்று வளமுடனும் நலமுடனும் வாழ்வர்.
0 Comments

அறுபத்து மூன்று நாயன்மார்கள்

2/28/2020

0 Comments

 
Picture
சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு சிவதொண்டிற்கே தம்மை அர்ப்ணித்துக்கொண்ட சிவனடியவர்கள் எக்காலத்திலும் இருந்தனர். இன்றும் எண்ணற்றவர் உள்ளனர். வரும் காலத்திலும் இருப்பர். சுந்தரமூர்த்தி சுவாமிகள் இயற்றிய திருத்தொண்டத்தொகை என்ற பாடலில், அவ்வாறு தொண்டு செய்தவர்களின் குறிப்புகளை விரித்து, சேக்கிழார் சுவாமிகள் 12 வது திருமுறையாகிய திருத்தொண்டர் (பெரிய) புராணம் தொகுத்தருளியுள்ளார். 12 ம் நூற்றாண்டுக்கு முன்னர் வாழ்ந்த இந்த அடியவர்களின் வரலாற்றை அறிந்துணர்ந்து நாமும் சிவதொண்டு செய்வோம். திருச்சிற்றம்பலம்.

(1) தில்லைவாழ் அந்தணர்: தில்லையில் நடராசப் பெருமானுக்கு வழிபாடு புரியும் அந்தணர்கள் 3000 பேர்.

(2) திருநீலகண்டர்: சிவனடியார்களுக்கு இலவசமாகத் திருவோடு கொடுத்து தொண்டு புரிந்த குயவர்.

(3) இயற்பகை நாயனார்: யார் எது கேட்டாலும் இல்லை என்று கூறாமல் கொடுத்து தொண்டு செய்பவர். இறைவன் சோதித்த போது, தம் துணைவியாரையே சிவனடியார்க்கு மனமுவந்து அளித்த வணிகர்.

(4) இளையான்குடி மாறர்: வறுமையிலும், நள்ளிரவிலும் மாகேசுவர பூசை செய்து அடியார்க்கு அமுது அளித்த வேளாளர்.

(5) மெய்ப்பொருள் நாயனார்: அடியார்கள் திருவேடத்தையே மெய்ப்பொருளாக எண்ணி, தன்னை கொன்றவரையே காத்தவர்.

(6) விறன்மிண்டர்: தேவாசிரிய மண்டபத்தில் வீற்றிருந்த சிவனடியார்களை வணங்காமையால் சுந்தரரையும் பகைத்த வேளாளர். இவரின் மூலமே சுந்தரர் திருத்தொண்டத்தொகை இயற்றி நமக்கு கிடைத்திட ஈசன் திருவுளம் கொண்டார்.

(7) அமர்நீதி நாயனார்: அடியார் கொடுத்த கோவணம் மறைந்ததற்கு ஈடு செய்ய தம் மனைவி, மக்கள், சொத்துக்களுடன் தன்னையும் சிவனடியார்க்கு அர்ப்பணம் செய்த வணிகர்.

(8)  எறிபத்த நாயனார்: சிவனடியார்கட்கு வரும் துன்பத்தை களைபவர். தன் கையிலிருந்த மழுவாயுதத்தால் சிவனடியாரை துன்புறுத்திய பட்டத்து யானையைக் கொன்று சைவத்தை வளர்த்தவர்.

(9)  ஏனாதிநாத நாயனார்: வாள்வித்தை பயிற்றுவிக்கும் ஆதிசூரனோடு யுத்தம் செய்யும் போது, ஆதிசூரன் நெற்றியில் திருநீறு அணிந்திருக்கவே அவனைக் கொல்லாது விட, சிவபெருமான் அவரைத் தம் திருவடியில் சேர்த்தருளினார்.

(10)  கண்ணப்பர்: சிவனின் மீதுள்ள அளவற்ற அன்பினால், தம் கண்களையும் பறித்து ஈசனுக்குக் கொடுத்த வேடுவர்.

(11)  குங்கிலியக் கலயனார்: நாள்தோறும் (வறுமை வந்தபோதும்) சிவனுக்கு குங்கிலியத் தூபமிட்ட மறையவர்.

(12)  மானக்கஞ்சாறன்: தம்மகளின் நீண்டகூந்தலைத் திருமணத்தன்று சிவனடியாரின் பஞ்சவடிக்காக அரிந்தளித்த வேளாளர்.

(13)  அரிவாட்டாயர்: நெல்லரிசியும் மாவடுவும் செங்கீரையும் கொண்டு தினமும் பூசை செய்பவர். ஓர் நாள் பூசைப் பொருட்கள் தவறித் தரையில் விழ, இன்று பூசை செய்ய வழியில்லையே என்று தம் கழுத்தறுக்க முயன்ற வேளாளர்.

(14)  ஆனாய நாயனார்: பஞ்சாட்சரத்தை வேய்ங்குழலால் இசைத்து முக்தி பெற்ற யாதவர்.

(15) மூர்த்தி நாயனார்: சந்தனக் கட்டை கிடைக்காதபோது தம் முழங்கையைத் தேய்த்து இறைவனுக்குக் காப்பிட்ட வணிகர்.

(16) முருக நாயனார்: தினமும் மலர் மாலைகள் தொடுத்து இறைவனை வழிபடும் திருத்தொண்டு செய்த மறையவர்.

(17)  உருத்திர பசுபதியார்: நாள் தோறும் திருவுருத்திர மந்திரங்களை ஓதி முத்தியடைந்த மறையவர்.

(18) திருநாளைப் போவார் (நந்தனார்): பறையர் குலத்தில் தோன்றிய இவர், தில்லை சிதம்பரத்தில் சிவனின் கட்டளைப்படி தீக்குள் புகுந்து வேதியராகி முக்தியடைந்தவர்.

(19)  திருக்குறிப்புத் தொண்டர்: தினமும் சிவனடியார்களின் ஆடைகளைத் துவைத்து அழுக்கு நீக்கி தொண்டு செய்தவர்.

(20)  சண்டேசுவரர்: சிவபூசைக்குரிய பாற்குடங்களை உதைத்த தமது தந்தையின் மீது வைக்கோலை வீச, அது மழுவாக மாறி அவரின் காலை வெட்டியது. தொண்டர்களுக்கெல்லாம் தலைவராகி சண்டீசர் பதவியை ஏற்ற மறையவர்.

(21)  திருநாவுக்கரசு சுவாமிகள்: சைவமும் தமிழும் தழைக்கத் தேவாரம் பாடியவர். புறச் சமய(சமணம்,பவுத்தம்) இருளை நீக்கிய வேளாளர். திருக்கோவில் உழவாரப்பணி செய்து தொண்டுபுரிந்தவர். 3,4,6 திருமுறைகளை அருளியவர்.

(22)  குலச்சிறை நாயனார்: கூன்பாண்டிய மன்னனின் முதலமைச்சராக இருந்து சைவ நெறியைக் காத்தவர்.

(23)  பெருமிழலைக் குறும்ப நாயனார்: சுந்தரமூர்த்தி நாயனாரையே தொழுது அவரோடு சிவப்பேறு பெற்றவர்.

(24)  காரைக்காலம்மையார்: சிவனருளால் இருமுறை மாயமாங்கனி பெற்றார். கயிலை மலையை கைகளால் நடந்து சென்ற போது சிவனே அம்மையே என்று அழைக்கப்பெற்றவர். அந்தாதி பாடி இசைத்தமிழுக்கும் சைவத்திற்கும் பங்களித்தார்.

(25) அப்பூதியடிகளார்: திருநாவுக்கரசரின் திருப்பெயரை ஓதி பல்வேறு தொண்டுகள் புரிந்து சிவப்பேறு பெற்ற அந்தணர்.

(26) திருநீல நக்க நாயனார்: ஈசனின் திருமேனியில் விழுந்த சிலந்தியை வாயில் ஊதிய மனைவியை துறக்க முயன்றவர். திருஞானசம்பந்தரின் திருமணத்திற்கு புரோகிதம் பார்த்து தரிசித்து சிவப்பேற்றை அடைந்த மறையவர்.

(27)  நமிநந்தியடிகள் நாயனார்: தினமும் திருவாரூர் கோவிலில் விளக்கு ஏற்றுவதை தொண்டாக செய்து வந்தவர். ஓர் நாள், சமணர்கள் எண்ணெய் தர மறுத்தமையால், திருவருள் பெற்று குளத்து நீரைக்கொண்டே விளக்கு எரித்த மறையவர்.

(28) திருஞானசம்பந்தர்: பார்வதி அம்மையே ஞானப்பால் அருளி சிவஞானம் பெற்றவர்; 1,2,3 திருமுறை பாடிச் சைவமும் தமிழும் தழைக்கச் செய்த மறையவர். பல அற்புதங்களை நிகழ்த்தி புறசமயம் அழிந்து சைவம் தழைக்க அருளியவர்.

(29)  ஏயர்கோன்கலிக்காமர்: சுந்தரர் சிவனைத் தூதனுப்பியதால் பகைத்து, பின் சுந்தரர் மூலம் சூலை நீங்கப்பெற்ற வேளாளர்.

(30)  திருமூல நாயனார்: கயிலை திருநந்தியின் மாணவ சிவயோகியர், மூலன் உடலில் புகுந்து திருமந்திரம் பாடிய சித்தர்.

(31)  தண்டியடிகள்: திருவாரூர்க் கமலாலயக் குளத்தை பிறவிக்குருடராக இருந்தும் திருத்தி தொண்டு செய்தவர்.

(32)  மூர்க்க நாயனார்: சூதாடி வென்ற பொருளால் சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்த வேளாளர்.

(33) சோமாசி மாற நாயனார்: சிவ வேள்விகள் புரிந்து சுந்தரரை வழிபட்டுச் சிவபதம் அடைந்த மறையவர்.

(34)  சாக்கிய நாயனார்: புத்த சமயத்திலிருந்து சிவனை உணர்ந்து திரும்பி, பூக்கள் இல்லாத நிலையில், நாள் தோறும் கற்களையே மலராகச் சிவலிங்கத்தின் மீது எறிந்து தமது சிவ பக்தியை வெளிப்படுத்தி சிவனருள் பெற்ற வேளாளர்.

(35)  சிறப்புலி நாயனார்: திருவைந்தெழுத்து ஓதி, அடியவர்க்கு அமுதும், யாகங்களும் செய்து தொண்டுபுரிந்த மறையவர்.

(36)  சிறுதொண்டர்: சிவனடியார் கேட்டதற்காக தம் பிள்ளையையே அரிந்து கறி சமைத்து அர்ப்பணித்து வழிபட்டவர்.

(37)  கழறிற்றறிவார்: உவர்மண் பூசிய சலவைத் தொழிலாளியை சிவனாக வணங்கிய மன்னன் சேரமான் பெருமான்.

(38)  கணநாதர்: சீர்காழியில் தினமும் திருப்பணி செய்தும், ஞான சம்பந்தரை வழிபட்டும் தொண்டுபுரிந்த மறையவர்.

(39)  கூற்றுவ நாயனார்: பஞ்சாட்சரத்தை ஓதி, நடராசரின் திருவடியே தம் மணிமுடியாகப் பெற்று வழிபட்ட குறுநிலமன்னர்.

(40)  பொய்யடிமையில்லாத புலவர்: சைவம், தமிழ் வளர்த்து, சிவனையே பாடிய சங்ககாலப் புலவர் நாற்பத்தொன்பதின்மர்.

(41)  புகழ்ச் சோழர்: எறிபத்த நாயனாரை அணைந்து என்னையும் கொன்றருள்க என்ற அரசர். அதிகனுடைய போரில், தம் படையினர் வெட்டி கொணர்ந்த படைவீரர் தலை ஒன்று சடைமுடி தரித்திருப்பதை அறிந்து மனம் நொந்து தீப்புகுந்தவர்.

(42)  நரசிங்கமுனையரையர்: போலிச் சிவனடியாரிடமும் அன்பு காட்டி பொன் கொடுத்தும், தொண்டுபுரிந்த பெருந்தகையார்.

(43) அதிபத்தர்: நாள் தோறும் தம் வலையில் அகப்படும் முதல் மீனை(தங்கமீனையும்) இறைவனுக்குப்படைத்த மீனவர்.

(44)  கலிக்கம்பர்: தமக்கு பணிவிடை செய்தவரையும் வழிபட்டவர். கரகநீர் தரமறுத்த மனைவி கையை வெட்டிய வணிகர்.

(45)  கலியநாயனார்: தினமும் விளக்கெறித்து தொண்டு செய்து, வறுமையில் வாடி, ஓர் நாள் எண்ணை இல்லாத போது, தம் மனைவியையும் வாங்குவதற்கு எவருமின்றி, தமது ரத்தத்தால் விளக்கெரிக்க தமது கழுத்தை அரிய முயன்ற வணிகர்.

(46)  சத்தி நாயனார்: சிவனின் திருவடித்தாமரைகளை சிறிதும் மறவாது திருத்தொண்டு செய்பவர். சிவனடியார்களை இகழும் பாதகர்களின் நாவைத் தண்டாயம் என்னும் குறடுபோலும் கருவியால் இழுத்துக் கத்தியால் அரிந்த வேளாளர்.

(47)  ஐயடிகள் காடவர்கோன்: ஆட்சியைத் துறந்து சிவத்தலங்களை வழிபட்டு க்ஷேத்ரத் திருவெண்பா நூலை இயற்றினார்.

(48)  கணம்புல்ல நாயனார்: சிவாலயத்தில் திருவிளக்கேற்றி தோத்திரம் செய்து வந்தார். வறுமை வரும் காலத்து, கணம்புல்லை விற்று நெய் வாங்கி தீபமேற்றினார். ஓர்நாள் நெய்யும் புல்லும் போதாமையால், தலைமயிரையே எரித்தார்.

(49)  காரி நாயனார்: “காரிக் கோவை” நூல் இயற்றி, மன்னர்களிடம் பொருள் பெற்று, சிவாலயங்கள் கட்டுவித்தார்.

(50) நின்றசீர் நெடுமாறன்: கூன் பாண்டியன் சமணத்திலிருந்து ஞானசம்பந்தரால் சைவத்திற்கு மாறி சைவத்தை வளர்த்தார்.

(51)  வாயிலார்: சிவனுக்கு மனதிலேயே கோவிலமைத்து ஞானவிளக்கேற்றி அன்பு படைத்து ஞானபூசை செய்த வேளாளர்.

(52)  முனையடுவார்: கூலிக்கு போர் செய்து திரட்டிய பொருளை அடியார்களுக்கு அருளி தொண்டுசெய்த வேளாளர்.

(53)  கழற்சிங்க நாயனார்: போரிட்டு வென்று சைவசமயம் தழைத்தோங்க செய்தார். ஓர்முறை, சிவாயலத்தில், பூ மண்டபத்திலிருந்த மலரை முகர்ந்து பார்த்த தம் மனைவியாரின் கையை வெட்டிய பல்லவ மன்னர்.

(54)  இடங்கழி நாயனார்: சிவனடியார்களுக்குத் திருவமுது செய்ய இயலாத ஓர் சிவனடியார், நெற்கூட்டு கொட்டகையில் திருடி அகப்பட, தம் செல்வத்தையும், நெற்பண்டாரத்தையும் அவருக்குக் கொடுத்து அருளிய குறுநில மன்னர்.

(55)  செருத்துணை நாயனார்: கழற்சிங்க நாயனாரின் மனைவி, பூ மண்டபத்திலுள்ள மலரை முகர்ந்து பார்த்ததால், அவரின் மூக்கையறுத்த வேளாளர். இதன் பிறகே கழற்சிங்கர் தமது மனைவியின் பூ எடுத்த கையை வெட்டினார்.

(56) புகழ்த்துணை நாயனார்: சிவாகம விதிப்படி தினமும் சிவனை அர்ச்சனை செய்துவந்தார். பஞ்சம் வந்த காலத்தில் சிவபெருமானின் திருவருளினால், தினமும் ஒவ்வொரு பொற்காசு பெற்று தொண்டுசெய்த ஆதிசைவர்.

(57) கோட்புலி நாயனார்: சோழநாட்டின் சேனாதிபதி போருக்கு சென்ற காலத்திலே, சிவபெருமானுக்குப் படைப்பதற்காக தாம் சேமித்து வைத்த நெல்லை உண்ட சுற்றத்தார் அனைவரையும் கொன்று நேர்மையை நிலைநாட்டிய வேளாளர்.

(58)  பத்தராய்ப் பணிவார்: திருவாரூரில் புற்றிடங்கொண்ட பெருமானை முழுமுதற்கடவுளாய் வழிபட்ட தொகையடியார்கள்.

(59)  பரமனையே பாடுவார்: சிவபெருமானை மட்டுமே பாடுபவர்கள், பிற தெய்வத்தைப் பாடாத தொகையடியார்கள்.

(60)  திருவாரூர்ப் பிறந்தார்: திருவாரூரில் பிறந்த அனைவரும் திருக்கையிலாயத்தில் உள்ள சிவகணங்களே ஆவர்.

(61) முப்போதும் திருமேனி தீண்டுவார்: மூன்று காலங்களிலும் சிவபெருமானையே அபிஷேகம் செய்து அர்ச்சிப்பவர்கள்.

(62) சித்தத்தை சிவன்பாலே வைத்தார்: சிவயோக நெறியில் சித்தத்தை வைத்து முக்தியடைந்தவர்கள்.

(63)  முழு நீறுபூசிய முனிவர்: உடல் முழுவதும் திருநீறு பூசி சிவபெருமானையே பூசித்து வருபவர்.

(64) அப்பாலும் அடிசார்ந்தார்: முத்தமிழ் நாடுகளுக்கு அப்பால் உள்ள அத்தனை நாடுகளிலும் உள்ள சிவனடியார்கள்.

(65)  பூசலார் நாயனார்: மனதிலேயே கோவில் கட்டி சிவனைப் பிரதிட்டை செய்து, சிவன் எழுந்தருளப் பெற்ற மறையவர்.

(66)  மங்கையர்க்கரசியார்: நின்ற சீர் நெடுமாறனின் மனைவி. சமணத்தில் உழன்ற மன்னரையும் நாட்டையும் காத்திட, திருஞானசம்பந்தரை மதுரைக்கு அழைத்து, தம் கணவரை சைவராக்கி, சைவத்தை மீட்டெடுத்த அரசியார்.

(67) நேச நாயனார்: சிவனடியார்களுக்கு உடை, கோவணம், கீள் முதலியன கொடுத்துக் காத்து தொண்டுபுரிந்த சாலியர்.

(68)  கோச்செங்கோட் சோழ நாயனார்: திருவானைக்கா மதில் பணி செய்து, எழுபது மாடக்கோவில்களைக் கட்டினார்.

(69) திருநீலகண்ட யாழ்ப்பாணர்: திருஞானசம்பந்தரின் திருக்கூட்டத்தோடு இணைந்து யாழ் இசைத்துப் பாடிய பாணர்.

(70)  சடைய நாயனார்: சுந்தரமூர்த்தி சுவாமிகளின் தந்தை. திருநாவலூரில் ஆதிசைவ குலத்தில், சிவதொண்டு புரிந்தார்.

(71)  இசை ஞானியார்: சுந்தரமூர்த்தி சுவாமிகளின் அன்னை. திருநாவலூரில் சிவதொண்டு புரிந்தார்.

(72) சுந்தர மூர்த்தி நாயனார்: சிவனின் தோழராய், 7ம் திருமுறை திருப்பாட்டு பாடி செந்தமிழ் வளர்த்த ஆதி சைவர்.

 இந்த 63 நாயன்மார்கள் 9 தொகை அடியார்களும் பல்வேறு வகுப்பைச் சார்ந்தவர்கள். நிலையில்லாத இவ்வுலகில் அழியும் பொருளைத் தேடி ஓடும் நாம், நிலையான வீடுபேற்றையும் இன்பத்தையும் பெற சிவதொண்டு புரிவோம். சிவனருள் பெறுவோம்.

 திருச்சிற்றம்பலம்!!!
0 Comments

மாசி மாதம்  அமாவாசை சிறப்புகள் !!

2/23/2020

0 Comments

 
Picture
0 Comments

பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் அருள்மொழி !!!

2/23/2020

0 Comments

 
Picture
0 Comments

Mahashivaratri Special

2/20/2020

0 Comments

 
0 Comments

ரமண மஹரிஷி பொன்மொழி

2/20/2020

0 Comments

 
Picture
0 Comments

மஹா சிவராத்திரி வழிபாடு  !

2/20/2020

0 Comments

 
Picture

சிவனு‌க்கு செ‌ய்ய‌ப்படு‌ம் பூஜைக‌ள் கு‌றி‌த்த முழு ‌விவர‌மு‌ம் இ‌ங்கு தர‌ப்ப‌ட்டு‌ள்ளது. அத‌ற்கே‌ற்ற பொரு‌ட்களை ‌நீ‌ங்க‌ள் வா‌ங்‌கி அ‌ளி‌க்கலா‌ம்.

சிவராத்திரியின் போது இரவு நான்கு யாமங்களாகப் பிரிக்கப்படுகிறது. அந்த நான்கு யாமங்களிலும் சிவலிங்கத்துக்கு விசேடமாக அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. அந்த யாமப் பூசைகளின் போது எவையெவற்றால் வழிபடவேண்டும் என்பதை புனித நூல்கள் எடுத்துக் கூறுகின்றன.

முதல் சாமம்:

இந்த முதல்கால பூஜை, படைக்கும் தேவன் "பிரம்மா" சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இந்த கால பூஜையில் "பஞ்ச கவ்வியத்தால்" (பசும்பால், பசுந்தயிர், பசுநெய், கோமயம், கோசாணம்) அபிஷேகம் செய்து, மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்தும், தாமரைப் பூவால் அர்ச்சனையும், அலங்காரமும் செய்து, பாசிப் பருப்பு பொங்கல் நிவேதனமாக படைத்து, நெய் தீபத்துடன் முதல் கால பூஜை ரிக் வேதபாராயணத்துடன் நடத்தப்படுகின்றது. இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் நம் பிறவி கர்மாக்களில் இருந்து விடுபட்டு நற்பலன்களை அடையலாம்.

இரண்டாம் சாமம்:

இந்த இரண்டாவது காலை பூஜையை காக்கும் தேவன் "விஷ்ணு". சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இந்த காலத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தும், சந்தன காப்பு சாற்றியும், வெண்பட்டு ஆடை அணிவித்து அலங்காரம் செய்தும், அர்ச்சனைகள் செய்தும், இனிப்பு பாயசம் நிவேதனமாக படைத்து, நல்லெண்ணை தீபத்துடன், இரண்டாவது கால பூஜை யஜுர்வேத பாராயணத்துடன் நடத்தப்படுகின்றது. இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் தன தானிய சம்பத்துக்கள் சேரும்.

மூன்றாம் சாமம்:

இந்த பூஜை சக்தியின் வடிவமாக அம்பாள் பூஜிப்பதாகும். இந்த காலத்தில் தேன் அபிஷேகம் செய்தும் பச்சை கற்பூரம் மற்றும் வில்வ இலையைக் கொண்டு அலங்காரம் செய்தும், சிவப்பு வஸ்திரம் அணிவித்தும், ஜாதி மல்லி பூவைக் கொண்டு அர்ச்சனைகள் செய்து "எள் அன்னம்" நிவேதனமாக படைத்து, இலுப்பை எண்ணை தீபத்துடன் சாமவேத பாராயணத்துடன் பூஜை முடிக்கப்படுகிறது. இந்த காலத்திற்குரிய சிறப்பு என்றால் இதை லிங்கோத்பவ காலம் என்றும் இந்த காலத்தில் சிவபெருமானின் அடி முடியைக் காண வேண்டி பிரம்மா அன்ன ரூபமாக மேலேயும், மகாவிஷ்ணு வராக ரூபமாக பாதாள லோகத்தையும் தேடிய சிறப்புடையது இந்த காலம். இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் எந்தவித தீய சக்தியும் நம்மை அண்டாமல் இருக்க சக்தியின் அருள் கிடைக்கும்.

நான்காம் சாமம்:

இந்த நான்காவது கால பூஜை முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிப்பதாக கருதப்படுகிறது. குங்குமப்பூ சாற்றி, கரும்பு சாறு & பால் அபிஷேகம் செய்தும், நந்தியாவட்ட பூவால் அலங்காரமும், அர்ச்சனையும் செய்து அதர்வண வேதப் பாராயணத்துடன் சுத்தான்னம் நிவேதனமாகப் படைத்தும், தூப தீப ஆராதனைகளுடன் 18 வகை சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் செய்யப்படுகிறது. மிக உயர்வான இந்த மகா சிவராத்திரி விரதத்தை இருந்து சிவபெரு மானை வழிபட்டு அனைத்து செல்வத்தையும், வாழ்வில் மகிழ்ச்சியையும் அடைவோமாக!

சிவராத்திரி சமயத்தில் மட்டும் கிடைக்கும் சிவகரந்தை எனும் பத்ரம் (இலை) கொண்டு அர்ச்சனை செய்வது மிகப் பெரும் பலன்களையும் அருளையும் தரக் கூடியது.

சிவராத்திரி நாள், சிவபிரான் இலிங்கத்தில் தோன்றியருளிய நாள்; பிரம்மா, விஷ்ணு ஆகியோரிடையே சோதிமயமாகத் தோன்றிய நாள்; புனர் உற்பத்திக்காக அம்மை அப்பனைப் பூசித்த நாள்.

ஒரு சமயம் பிரளயத்தில் எல்லா உயிரினங்களும் அழிந்து பிரபஞ்சமே சூனியமாகி விட்டது. உயிர்கள் அனைத்தும் திரும்பவும் தோன்றி, வாழ்ந்து ஈடேறும்பொருட்டு ஐந்தொழில்களையும் அப்பனே ஏற்று நடத்துவான்வேண்டி, இரவில் நான்கு சாமங்களிலும் அம்மை, அப்பனை உளமுருகி வேண்டிய நாளே சிவராத்திரி.

0 Comments

Siva Puranam:

2/16/2020

0 Comments

 
Picture
Picture
0 Comments

சிவன் ஆலயங்களில் எவ்வாறு வழிபட வேண்டும் என்று தெரியுமா?

2/12/2020

0 Comments

 
0 Comments

தைப்பூசம் ஸ்பெஷல்:-

2/8/2020

0 Comments

 

தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். 27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம் ஆகும். தை மாதத்திலே வரும் பூச நட்சத்திரம் புண்ணிய நாள் தைப்பூச விழாவாக இந்துக்களால் கொண்டாடப்படுகின்றது. தைப்பூசம் வரும் நாள் பெரும்பாலும் நிறைமதி நாளாக (பூரணை நாளாக) இருக்கும்.
 
தைப்பூசம் முருகப்பெருமானுடைய விஷேட தினமாகும். அன்றைய தினம் குழந்தைகளுக்கு தோடு குத்துதல், ஏடு தொடக்குதல் போன்றவற்றை சிறப்பாக செய்து வைப்பார்கள்.மற்றும் அடியார்கள் காவடி எடுத்தல், கற்பூரச்சட்டி போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவார்கள்.இந்த நாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில் களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.
 
பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகிய முனிவர்கள் இருவருக்கும் சிவபிரானாகிய நடராசப்பெருமான் சிவதாண்டமாடிக் காணுப்படி செய்தநாளாகவும் தைப்பூசம் விளங்குகின்றது. அத்துடன் வாயுபகவானும், வர்ணபகவானும், அக்கினி பகவானும் சிவபிரானின் அதீத சக்தியை உணர்ந்த நாளாகவும் இந்நாள் போற்றப்படுகின்றது. அதாவது இயற்கையை கட்டுப்படுத்தும் சக்தியாக இறைவனே உள்ளமை உணர்த்தப்பட்ட புண்ணியநாள் இத் தைப்பூச நன்னாளாகும்.
 
சிவனுக்குரிய சிறப்பு மிக்க நன்னாட்களில் ஒன்றாகக் கொள்ளப்படும் இத் தைப்பூச நன்னாளானது முருகப் பெருமானுக்குரிய விசேட நாளாகவும் விளங்குகின்றது. சிவசக்தி ஐக்கியமான முருகப்பெருமான் மாட்சிமை பெறும் தினமாகவும். முருகப் பெருமான் அன்னையிடம் வேல் வாங்கிய திருநாளும் இதுவாக அமைகிறது. சிவனின் அருளினால் தோன்றிய முருகன் அன்னையின் சக்தியையும் பெற்று சிவசக்தியின் பேரருள் மிக்கவராக இத் தைப்பூச நாளில் திகழ்வதால் முருகன் ஆலயங்களில் அபிஷேகம், திருவிழா முதலியன நிகழ்தப்படுகின்றன. முருகனை வேண்டிப் பலர் இந்நாளில் விரதமிருப்பர்.
 
தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விரதம் இருந்து ஆயிரக்கணக்கான முருக அடியார்கள் பாத யாத்திரையாக வருகிறார்கள்.பாதயாத்திரையாக வரும் பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். சஷ்டிகவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள்.
 
தைப்பூசத்தன்று முருகனுக்கு காவடி நேர்த்திக்கடன் செலுத்துவதையும் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். தீராத நோய்கள் ஏற்பட்டு அவதிப்படும் பட்சத்தில், முருகக் கடவுளுக்கு காவடி எடுப்பதாக வேண்டிக் கொண்டால் அவர்களைப் பீடித்துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறுவதை எண்ணற்ற பக்தர்கள் உணர்வுப் பூர்வமாக அனுபவித்துள்ளனர். தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும், பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் தைப்பூச தினத்தன்று காவடி நேர்ச்சையை செலுத்துகிறார்கள். முருகன் உறையும் எல்லா தலங்களிலுமே காவடி எடுக்கும் பக்தர்கள் உள்ளனர்.
 
இத்தினத்தில் புண்ணிய நதிகளில் நீராடுவது சிறப்பாகும் இயலாதவர்கள் புண்ணிய நதிகளை நினைத்துப் போற்றி வழிபட்டு நீராடுதல் வேண்டும். வாழ்வில் ஒளியேற்றும் இத் தைப்பூச நன்னாள் பல்வேறு நற்செயல்கள் தொடங்கும் நாளாக அமைகின்றது.
 
“தைப்பூச திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்” என்பது பழமொழியாக அமைவதால்; ஏடு தொடக்கம், புதிர் எடுத்தல், புதி துண்ணல், பெண் குழந்தைக்கு காது, மூக்கு குத்துதல், திருமணப் பேச்சுக்கள் ஆரம்பித்தல், ஒப்பந்தங்கள் செய்தல் போன்ற நற்செயல்கள் மேற் கொள்ளப் பெறுகின்றன.
தைபூசத்திருநாளிலே தொடங்கும் செயல்கள் தொய்வின்றி இனிதே நிறைவேறும் என்பது காலம் காலமாக நாம் கொண்டுள்ள நம்பிக்கையாகும்.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா !

Picture
0 Comments

சூரியனார் கோவில் தல அமைப்பு:-

2/8/2020

0 Comments

 

கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் ஆடுதுறையை அடுத்து அமைந்துள்ளது சூரிய பரிகார தலமான "சூரியனார் கோவில் ". மேற்கு நோக்கி அமைந்துள்ள இத் திருக் கோயிலின் 50 அடி உயர ராஜ கோபுரம் மூன்று நிலைகளையும், ஐந்து கலசங்களையும் கொண்டது. கோபுரத்தில் எழில்மிகு புராணச் செய்திகள் சுதைச் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரே பிரகாரமும் , நாற் புறமும் நெடும் மதில் சுவர்களையும் உடைய ஆலயத்தின் மத்தியில் அமைந்துள்ள கர்ப்ப கிரகத்தில் மூலவராக " சூரிய தேவன் " இடப் புறம் உஷா தேவியுடனும், வலப் புறம் சாயா தேவியான பிரத்யுஷா தேவியுடனும், தன் இரு கைகளில் செந்தாமரை மலர்கள் ஏந்தி மலர்ந்த முகத்துடன் காட்சி தருகிறார்.
 
இவர், தன்னை வழிபடுபவரது பகையையும், கவலைகளையும் போக்குபவர். நினைத்த காரியங்களை நிறைவேற்றி தருபவர். கண், இருதய மற்றும் காமாலை நோய்களை தீர்ப்பவர். ஏழரை, அஷ்டம மற்றும் ஜென்ம சனி திசை நடப்போரும், மற்ற நவக்கிரக தோஷமுள்ளவர்களும் இத் தல நாயகனை வழிபட வேண்டும். 12 ஞாயிற்று கிழமைகள் இத் தலத்திலேயே தங்கி வழிபடுவது மிகச் சிறப்பு. பரிதி, அருக்கன், ஆதித்தன், பானு, ஞாயிறு, பகன், கனலி, கதிரவன், கமலநாயகன், வெங்கதிரோன், வெய்யோன், மார்த்தாணடன், தினகரன், பகலவன் என பல்வேறு பெயர்களுடன் போற்றப்படும் சூரியன் நவ நாயகர்களின் தலைவன். சிவனது முக்கண்ணில் வலது கண்ணாக திகழ்பவர். புகழ், மங்களம், கீர்த்தி, செல்வாக்கு, ஆட்சி திறம் போன்றவற்றை அளிப்பவன்.
  
சூரிய தசா புத்தி நடப்பவர்கள், சூரிய பகவானை சிவப்பு நிற மலர்களால் அர்ச்சிப்பதாலும், சிவப்பு நிற ஆடைகளை உடுத்திக் கொள்வதாலும், மாணிக்கத்தை அணிவதாலும், ஞாயிற்று கிழமைகள் விரதம் இருப்பதாலும், சிவப்பு நிற பசு மற்றும் தானியங்களை தானம் செய்வதாலும், சூரிய நமஸ்காரம் மற்றும் சூரியனார் கோவில் வழிபாட்டாலும் கிரக தோஷ நிவர்த்தி பெறலாம். சிவ சூரிய நாராயணனாக சூரிய பெருமான் குடி கொண்டுள்ள இத் தலத்தில் உட் பிரகாரத்தில் மற்ற எட்டு நவக்கிரக நாயகர்களும் தனி சந்நிதி கொண்டுள்ளனர். மற்ற ஆலயங்களை போலல்லாது இத் திருத்தல வழிபாடு சற்றே வேறுபட்டது. மனதில் எப்படிப்பட்ட சஞ்சலங்கள் இருந்தாலும், எத்தகைய ஆபத்துகளில் அகப்பட்டு கொண்டாலும், தாங்க முடியாத துயரங்கள் ஆட்கொண்டாலும் " ஆதித்ய ஹிருதயத்தை " மனத் தூய்மையுடன் பாராயணம் செய்தால் அல்லல்களும், துன்பங்களும் வந்த சுவடே தெரியாமல் மறைந்தோடும்.
  
🔯சூரியனார் கோவில் வழிபாடு
மற்ற ஆலயங்களை போலல்லாது, இத் திருத் தல வழிபாடு சற்றே வேறுபட்டது. வழிபாட்டு முறை அறிந்து வணங்குதல் மிகச் சிறந்த பலன் அளிக்கும். சூரியனார் கோவிலை வழிபடுவதற்கு முன்னர் அருகில் உள்ள " திருமங்கலக்குடி " சென்று " பிராணவரதரையும் ", அம்மனையும் வழிபட வேண்டும். பின்னர், சூரிய தீர்த்தத்தில் நீராடி, கோபுர தரிசனம் செய்து, கொடி மரம் வணங்கி, கோள் தீர்த்த விநாயகரை வீழ்ந்து வணங்க வேண்டும்.
 
பின்னர், நடராஜரையும், சிவகாமியையும், காசி விஸ்வநாதரையும், விசாலாட்சியையும் வழிபட்டு, மூலவாராய், தன் இரு தேவியருடன் காட்சி அருளும் சூரிய பகவானை நைவேத்யம் வைத்து, அபிஷேக, ஆராதனைகளுடன் வணங்க வேண்டும்.அதன் பிறகு, வெளிப் பிரகாரம் வந்து, முறையே குரு பகவானையும், நெய் தீபம் கொண்டு சனீஸ்வரனையும், புதனையும், அங்காரகனான செவ்வாயையும், சந்திரனையும் பின்னர் கேதுவையும் மலர்களால் அர்சித்தும், அர்ச்சனைகள் செய்தும் வணங்க வேண்டும்.
 
கடைசியாக சுக்கிர பகவானையும் , ராகுவையும் வழிபட வேண்டும். ( செல்லும் முறை அறிய அம்புக் குறி இடப்பட்டுள்ளது ). மீண்டும் விநாயகரிடம் வந்து அவரை துதித்து, கொடி மரத்தின் கீழ் வீழ்ந்து வணங்கி வடக்கு, கிழக்கு, தெற்கு பிரகாரம் வழியாக கோவிலை 9 முறை இடமாக ( மற்ற ஆலயங்களை போல வலமாக அல்ல ) வர வேண்டும். வழிபாட்டின் பூர்த்தியாக விநாயகரை மீண்டும் வீழ்ந்து வணங்கி வெளிப்புறம் சென்று அங்குள்ள சாதுக்களுக்கு முடிந்த அளவு தானம் செய்யலாம்.
 
சூரிய பகவானுக்கு உரியவையும், பிரீத்தியானவையும் ராசி    சிம்ம ராசிக்கு நவக்கிரகங்களுக்கு நடுவில் அதி தேவதை  அக்கினி ப்ரத்யதி தேவதை உருத்திரன தலம்  சூரியனார் கோயில் வாகனம்   ஏழு குதிரை பூட்டிய தேர் நிறம் சிவப்பு உலோகம் தம்பாக்கு தானியம்  கோதுமை மலர் செந்தாமரை வஸ்திரம் சிவப்பு ஆடை ரத்தினம் மாணிக்கம் நைவேத்யம கோதுமை சக்ரான்னம் சமித்து வெள்ளெருக்கு தன்னை வழிபடுபவரது பகையையும், கவலைகளையும் போக்குபவர். நினைத்த காரியங்களை நிறைவேற்றி தருபவர்.
 
கண், இருதய மற்றும் காமாலை நோய்களை தீர்ப்பவர். ஏழரை, அஷ்டம மற்றும் ஜென்ம சனி திசை நடப்போரும், மற்ற நவக்கிரக தோஷமுள்ளவர்களும் இத் தல நாயகனை வழிபட வேண்டும்.  12 ஞாயிற்று கிழமைகள் இத்தலத்திலேயே தங்கி வழிபடுவது மிகச் சிறப்பு. 

Picture
0 Comments



    ​Categories

    All
    Siva Puranam
    அறுபத்து மூன்று நாயன்மார்கள்
    மஹா சிவராத்திரி
    மாசிமகம்

    Archives

    March 2020
    February 2020

Home

About Us

PRIVACY POLICY

Contact

Copyright © 2020
  • Home
  • HEALTH TIPS
    • Ladies
    • Heart
    • Liver
    • EYES
    • General
  • BEAUTY TIPS
    • Skin Care
    • Glow Tips
    • Lips
    • Dark Circle
    • Hair Care
  • TAMIL KAVITHAI
    • Love Feeling
    • Love Failure
    • Motivational
    • Happiness
    • Friendship
    • Birthday Wishes
    • General
  • SPIRITUAL CONTENTS
  • FOOD RECIPES
    • Veg
    • Non - Veg
    • Sweets
    • Snacks
    • General Tips
  • THIRUKURAL
    • அறத்துப்பால்
    • பொருட்பால்
    • இன்பத்துப்பால்
  • Contact
    • Privacy Policy
    • About Us